சுடச்சுட

  

  நக்ஸல் தாக்குதல் எதிரொலி: பஸ்தர் பகுதியில் சிஆர்பிஎஃப் விரைவில் பதிலடி

  By DIN  |   Published on : 28th April 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தின் பஸ்தர் பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தியதற்கு விரைவில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) தெரிவித்தது.
  கடந்த திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர். சுக்மா மாவட்டத்தில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
  நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்த சில வாரங்களில் உரிய பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  இதுதொடர்பாக சிஆர்பிஎஃப்பின் தாற்காலிக தலைமை இயக்குநர் சுதீப் லக்தாகியா, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
  நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்து வருகிறோம். சுக்மா மாவட்டத்தின் பஸ்தர் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பாதுகாப்பு அளித்தபோதுதான் இத்தகைய தாக்குதலை நக்ஸல்கள் நடத்தினர். இருப்பினும் சாலை அமைக்கும் பணிகளுக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பார்கள். இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். நக்ஸல்களுக்கு எதிராக கடைபிடிக்கப்பட்டுவரும் உத்தியை மாற்ற முடிவு செய்திருக்கிறோம். சத்தீஸ்கரில் நக்ஸல்களை ஒடுக்க 28 படைப் பிரிவுகளை களமிறக்கியுள்ளோம்.
  சிஆர்பிஎஃப் வீரர்கள் மொத்தம் 1,000 பேர் உள்ளனர். பஸ்தர் பகுதியில் ஒரு பிரிவு வீரர்கள் சாலை அமைப்பதற்கு பாதுகாப்பு அளிப்பார்கள். மற்றொரு பிரிவு வீரர்கள் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று சுதீப் லக்தாகியா தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai