சுடச்சுட

  

  நாட்டிலேயே மிகவும் வறுமையான மாநிலம் மேற்கு வங்கம்: அமித் ஷா

  By DIN  |   Published on : 28th April 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amithsha

  நாட்டிலேயே வறுமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மேற்கு வங்கம் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
  மேற்கு வங்கத்துக்கு 3 நாள் பயணமாக அமித் ஷா சென்றுள்ளார். அந்த மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக பிரமுகர்களை வியாழக்கிழமை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தி
  னார். அப்போது அவர் கூறியதாவது:
  நாட்டிலேயே வறுமையால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும்போது துர்கா சிலைகளை நீர்நிலைகளுக்குக் கொண்டு சென்று கரைப்பதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகும் தேவை இருக்காது.
  சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகளை எந்தவித பிரச்னையும் இன்றி மக்கள் கொண்டாடலாம்.
  இங்கு நடைபெறும் அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்பதை உறுதியுடன் கூற முடியும். மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களைப் போல், இங்கும் பாஜக ஆட்சி அமைந்தால் மேற்கு வங்கம் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும் என்றார் அமித் ஷா.
  கடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் உள்ள பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாட மாணவர்களில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai