சுடச்சுட

  

  புனிதத் தலங்களுக்கு சுற்றுச் சுவர் எழுப்ப உ.பி. முதல்வர் உத்தரவு

  By DIN  |   Published on : 28th April 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புனித வழிபாட்டுத் தலங்களுக்கு சுற்றுச்சுவர் எழுப்புமாறு அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
  அந்த மாநிலத்தில் உள்ள பிரபல வழிபாட்டுத் தலங்கள் மீது, ஐஎஸ்ஐ அமைப்பிடம் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், சாதுக்களின் வேடமணிந்து தாக்குதல் நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த உத்தரவை முதல்வர் புதன்கிழமை பிறப்பித்தார்.
  மேலும், முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, 4 வழிச் சாலைகளை அமைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
  இதுதொடர்பாக, மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஆஸிம் அருண் கூறுகையில், ''பயங்கரவாதிகளின் சதியை முறியடிப்பதற்காக, அனைத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களும், ரயில்வே கண்காணிப்பாளர்களும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகிறோம்'' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai