சுடச்சுட

  

  வேலையை விட்டுவிடுங்கள்: சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு மாவோயிஸ்டுகள் வலியுறுத்தல் (ஆடியோ இணைப்பு)

  By DIN  |   Published on : 28th April 2017 06:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  crpf

   


  சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தாங்கள் தான் என்று தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள மாவோயிஸ்டுகள்,  வீரர்கள் தங்களது வேலையை விட்டுவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

  சுக்மா மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை மத்திய காவல் படைவீரர்களின் முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் 26 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  மாவோயிஸ்டுகளின் செய்தித் தொடர்பாளர் விகல்ப், சுக்மா தாக்குதல் குறித்து பேசிய ஆடியோ பதிவு காவல்துறைக்குக் கிடைத்துள்ளது. (இதன் உண்மைத் தன்மை குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.)

  6 நிமிடங்கள் ஓடும் அந்த ஆடியோவில், மார்ச் 11ம் தேதி நடந்த தாக்குதலின் தொடர்ச்சிதான் சுக்மா தாக்குதல். இது எங்கள் 2017ம் ஆண்டு திட்டத்தில் ஒன்றாகும். இது 2016ம் ஆண்டு எங்களது கூட்டாளிகள் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டதற்கும், ஒடிசாவில் எங்களைப் பாதுகாக்க முயன்ற 9 கிராம மக்கள் கொல்லப்பட்டதற்கும், பாதுகாப்புப் படையினரின் மோசமான அடக்குமுறைக்கும், பழங்குடியினப் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கும், பழிக்கு வழி வாங்கும் வகையில் நடத்தப்பட்டது.

  இந்த ஆடியோவில் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, பாதுகாப்புப் படை வீரர்களும், அரசின் மிகவும் கீழ் நிலையில் பணியாற்றும் ஊழியர்களும் தங்களது வேலைகளை விட்டுவிட வேண்டும். 'உங்கள் உயிரை இழக்க வேண்டாம். மக்களுக்கும், எங்களுக்கும் எதிராக வேலை செய்யும் மத்திய அரசுக்காக நீங்கள் பணியாற்றுகிறீர்கள். எங்களுக்கு எதிராக நீங்கள் இருப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம். அதனால்தான், எங்களது கொரில்லா தாக்குதல்களுக்கு நீங்கள் இலக்காகிறீர்கள்.' என்று விகல்ப் கூறியுள்ளார். மேலும், ஆச்சரியமூட்டும் வகையில் 'நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல' என்றும் தெரிவித்துள்ளார்.

  சுக்மா மாவட்டத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளைத் தடுக்கவே மாவோயிஸ்ட் அமைப்பினர் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துகின்றனர். ஆனால், மக்களின் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கிறார்கள் என்று காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தெர்ராஜ் கூறியுள்ளார்.

  மாவோயிஸ்டுகள் வெளியிட்ட ஆடியோ

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai