சுடச்சுட

  

  அசாதாரண சூழல் எதிரொலி: காஷ்மீரில் தலைமைச் செயலர் மாற்றம்

  By DIN  |   Published on : 29th April 2017 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு - காஷ்மீர் தலைமைச் செயலராக பி.பி.வியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பை இதுவரை வகித்து வந்த பி.ஆர்.சர்மா, மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  ஜம்மு - காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை அந்த மாநில அரசு எடுத்துள்ளது. பிரிவினைவாதத்தை வலியுறுத்தியும், வேறு சில விவகாரங்களை முன்வைத்தும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. அண்மையில் கல்லூரி மாணவர்களுக்கும் - போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில் 20 மாணவர்கள் காயமடைந்தனர். இதுவும் அந்த மாநில அமைதிக்கு ஊறு விளைவித்தது.
  இந்நிலையில், முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வன்முறைச் சூழலை சமாளிக்க அனுபவமிக்க அதிகாரி ஒருவரை தலைமைச் செயலராக நியமிக்க வேண்டும் என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்பொறுப்புக்கு வியாஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதனை ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்களும் ஆமோதித்தனர்.
  இதையடுத்து வியாஸ், மாநிலத்தின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். மாநில நிதித் துறை ஆணையர், திட்ட அமலாக்கத் துறைச் செயலர் உள்ளிட்ட பொறுப்புகளை அவர் தற்போது வகித்து வருகிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai