சுடச்சுட

  

  ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 4 பேரைக் காணவில்லை.
  இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
  அனந்தபுரம் மாவட்டம், குண்டக்கல் நகர் அருகே உள்ள எர்ரதிம்மராஜு வாகு என்ற பகுதியில் ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை படகுப் பயணம் மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது.
  இதில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் 6 பேர் சிறார்கள், 5 பேர் பெண்கள். மேலும் 4 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிக ஆட்களுடன் படகில் சென்றதாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
  படகு விபத்தில் பலியானவர்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்தார். மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்புடைக்குமாறும் அனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு அவர் உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai