சுடச்சுட

    

    உ.பி.: பணி நேரத்தில் ஏமாற்றும் அதிகாரிகளை பிடிக்க யோகி அதிரடி

    By DIN  |   Published on : 29th April 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    yogi

    உத்தரப் பிரதேசத்தில் பணி நேரத்தின்போது, அலுவலகத்தில் இல்லாமல் வெளியே சென்றுவிடும் அதிகாரிகளை பிடிப்பதற்காக, அவர்களது அலுவலக தொலைபேசிகளுக்கு திடீரென தொடர்புகொண்டு விசாரிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.
    இதுதொடர்பாக மின் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    அரசு அதிகாரிகளின் அலுவல்பூர்வ தொலைபேசிகளுக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீர் அழைப்புகள் மேற்கொள்வார். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த நேரம் வேண்டுமென்றாலும் அழைப்புகள் வரலாம்.
    அந்த நேரத்தில், அலுவலகத்தில் இல்லாத அதிகாரிகள், அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். களப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, சிறிது விதிவிலக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.
    உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றது முதலே, அரசு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். 18 முதல் 20 மணிநேரம் வரை, அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்; இதில் ஏதேனும் பிரச்னை இருப்பின், அவர்கள் வேறு பாதையைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
    அத்துடன், பணிக்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்களை கண்காணிக்க, அனைத்து அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும், யோகி ஆதித்யநாத் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
    மேலும், பிரபல தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் மறைந்த தினங்களுக்காக, முந்தைய அரசால் வழங்கப்பட்ட 15 பொது விடுமுறைகளையும் ஆதித்யநாத் அரசு அண்மையில் ரத்து செய்தது.
    'பிரச்னை செய்வோரை ஒடுக்குங்கள்': இதனிடையே, 'மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே எனது அரசின் முதன்மையான நோக்கம்; பிரச்னை செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்' என்று காவல்துறையினருக்கு யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai