சுடச்சுட

  

  மத்தியப் பிரதேசத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு 20 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தார்.
  ஒவ்வொரு வீடும், மத்திய அரசின் ரூ.3 லட்சம் மானியத்துடன், மாநில அரசின் ரூ.2 லட்சம் நிதியுடன் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
  தில்லியில் இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
  நான் 12 ஆண்டுகளுக்கு முன் முதல்வராகப் பொறுப்பேற்றேன். அப்போது, வளர்ச்சியில் பின் தங்கிய மாநிலங்களின் பட்டியலில் இருந்த மத்தியப் பிரதேசம், தற்போது வளர்ச்சியடைந்துள்ளது.
  மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகா வாட் திறனுடன் சூரிய மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மரபுசாரா எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு முதலீட்டுக்கு உகந்த இடமாக மத்தியப் பிரதேசம் விளங்குகிறது.
  மாநிலத்தில் கடந்த 17 ஆண்டுகளில் பாசன நிலப்பரப்பு அதிகரித்துவிட்டது. நதிநீர் இணைப்புத் திட்டத்தால், தொலைதூரப் பகுதிகளுக்கும் நீர் கிடைக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் விவசாய உற்பத்தி இரு மடங்காக அதிகரித்துள்ளது.
  ஒவ்வொரு கிராமமும் சாலைகள், மின்சாரம், இணைய வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றைப் பெற்றுள்ளது என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai