சுடச்சுட

  

  கருப்புப் பணத்தை ஒழிக்க வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும்: நீதி ஆயோக் பரிந்துரை

  By DIN  |   Published on : 29th April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை வலுப்படுத்துவது, ஊழல் வழக்குகளை குறித்த காலத்துக்குள் முடிப்பது, வரிவிதிப்பைக் குறைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என மத்திய கொள்கை குழு (நீதி ஆயோக்) பரிந்துரைத்துள்ளது.
  நாட்டில் நடைமுறையில் இருந்த 5 ஆண்டுத் திட்டங்களுக்கு மாற்றாக 3 ஆண்டு செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
  இதற்கான வரைவு அறிக்கையை, மத்திய கொள்கைக் குழு பொதுமக்கள் பார்வைக்கு வியாழக்கிழமை வெளியிட்டது. முன்னதாக, இந்தக் குழுவின் சார்பில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 208 பக்கங்கள் அடங்கிய மாதிரி அறிக்கை வழங்கப்பட்டது.
  இந்த வரைவு செயல் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வெகுவாகக் குறைக்க வேண்டும்.
  கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்க வரிவிதிப்புகளைக் குறைக்க வேண்டும். வரி வசூலிப்பை எளிமையாக்க வேண்டும். ரியல் எஸ்டேட் தொடர்பான பணப் பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க வேண்டும். ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது, முத்திரை வரிகளைக் குறைப்பது உள்ளிட்ட சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
  ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களை வலுப்படுத்த வேண்டும். மேலும், அந்த வழக்குகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும்.
  வருமான வரித் துறையில் நிலவும் ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். ஊழலில் ஈடுபடும் அந்தத் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் கொள்முதலை, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணைய வழியில் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai