சுடச்சுட

  

  கடந்த காலங்களில் தங்களது கட்சித் தலைவர்கள் செய்த விஷயங்களைத்தான் தற்போது பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் பின்பற்றி வருகிறார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
  மேற்கு வங்கத்தில் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமித் ஷா, ஏழை மக்கள் மற்றும் பழங்குடியினர் வீடுகளுக்குச் சென்று உணவு அருந்தியதை விமர்சிக்கும் வகையில் இக்கருத்தை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக, மேற்கு வங்க சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அப்துல் மன்னான் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  மதத்தை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக பயன்படுத்தி வருகிறது. அக்கட்சியுடன் மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸும் சுயலாபத்துக்காக மறைமுகக் கூட்டு வைத்துள்ளது. இத்தகைய சக்திகளை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சிகள் அணி திரள வேண்டும்.
  மேற்கு வங்கத்தில் பயணம் மேற்கொண்ட அமித் ஷா, ஏழை மக்களின் வீடுகளுக்குச் சென்றதாகச் செய்திகள் வெளியாகின. மறைந்த பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பல முறை ஏழை மக்களின் குடிசைகளுக்கு நேரில் சென்று அவர்களுடன் உணவு அருந்தியுள்ளனர். அதைத்தான் தற்போது அமித் ஷாவும் பின்பற்றி இருக்கிறார். இதில் புதிதாக எதுவுமில்லை என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai