சுடச்சுட

  
  mayavathi

  குஜராத்தில் தலித்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
  பகுஜன் சமாஜ் கட்சியின் குஜராத் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், லக்னௌவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாயாவதி பங்கேற்றுப் பேசியதாவது:
  குஜராத்தில் தலித்துகள், மலைவாழ் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பெருமுதலாளிகளும், செல்வந்தர்களுமே அங்கு ஆட்சி புரிந்து வருகின்றனர். இதனால், அங்கு சமுதாயக் கட்டமைப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. குஜராத்தில் வாழும் முஸ்லிம்களிடம் அதிகப்படியான பாகுபாடு காட்டப்படுகிறது. உரிய நீதி கிடைக்க வழியின்றி, அவர்கள் தவிக்கின்றனர்.
  பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணையும்பட்சத்தில், வரும் தேர்தலில் பாஜக-வை எளிதில் வீழ்த்திவிட முடியும் என்றார் மாயாவதி.
  குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai