சுடச்சுட

  

  தமிழகத்தில் வறண்டு வரும் நீர் ஆதாரங்கள்: மத்திய அரசு தகவல்

  By DIN  |   Published on : 29th April 2017 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  water

  தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நீர் இருப்பு விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைப் பொருத்தவரை அந்த விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாடு முழுவதும் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகளில் உள்ள நீர் இருப்பு தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நாட்டின் முக்கிய நீர் நிலைகளின் மொத்தக் கொள்ளளவில் தற்போது 27 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த  வாரம் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டில் மொத்த நீர் இருப்பு 46.02 பில்லியன் கன மீட்டராக (29 சதவீதம்) இருந்ததாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு, தற்போது அந்த அளவு 42.6 மில்லியன் கன மீட்டராக (27 சதவீதம்) குறைந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

  பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நீர் இருப்பு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதேவேளையில், தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ஹிமாசலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட் மாநிலங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நீர் இருப்பு விகிதம் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai