சுடச்சுட

  

  நாடு முழுவதும் 95 நாள் சுற்றுப் பயணம்: இன்று தொடங்குகிறார் அமித் ஷா

  By DIN  |   Published on : 29th April 2017 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடு முழுவதும் 95 நாள் சுற்றுப் பயணத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சனிக்கிழமை தொடங்குகிறார்.
  வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து அவர் இந்தப் பயணத்தைத் தொடங்குகிறார். குறிப்பாக, கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக தோல்வியடைந்த 120 தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
  ஜம்மு-காஷ்மீரில் தனது பயணத்தைத் தொடங்கும் அமித் ஷா, ஒவ்வொரு மாநிலத்திலும் 3 நாள்கள் வரை தங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பாஜகவின் வலிமை, கட்சியை விரிவுபடுத்துதல், வாக்கு விகிதம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நாடு தழுவிய பயணத்தை மேற்கொள்கிறேன்'' என்றார்.
  கடந்த மக்களவைத் தேர்தலின்போது, மேற்கு வங்கம், ஒடிஸா, தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 102 தொகுதிகளில், 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது. எனவே, அந்த மாநிலங்களுக்கு அமித் ஷா சிறப்புக் கவனம் செலுத்தவுள்ளார்.
  அவர் தனது சுற்றுப் பயணத்தை, ஜனசங்கத் தலைவர் தீனதயாள் உபாத்யாயவின் 101-ஆவது பிறந்தநாளான செப்டம்பர் 25-ஆம் தேதி நிறைவு செய்கிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai