சுடச்சுட

  

  நிதித் தட்டுப்பாடு காரணமாக வளர்ச்சி பாதிப்படைய விடமாட்டோம்

  By DIN  |   Published on : 29th April 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  VENKAIAH

  நிதிப் பற்றாக்குறை காரணமாக, வளர்ச்சி பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
  மத்திய தகவல், ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், ஹரியாணா மாநிலம், சண்டீகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு வெங்கய்ய நாயுடு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஆளுகைக்காகவும், 'ஒரே இந்தியா-ஒரே தேசம்' என்ற புதிய கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்திருக்கிறார். அந்தக் கொள்கையை நோக்கியே ஒட்டுமொத்த அரசியல் செயல்பாடுகளும் நடைபெறுகின்றன. ஹரியாணா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து முக்கியத் திட்டங்களுக்கும், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகமும், தேசியத் தலைநகர் வலயப் பகுதி திட்ட வாரியமும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
  அண்மையில், போக்குவரத்துக்கென தனிப் பிரிவை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இது, மாநில அரசுகள், தங்களது போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெரிதும் உதவும்.
  எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தல்: அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது தோல்விக்கான காரணங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. அண்மையில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
  இந்த விவகாரத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சாக்குப்போக்குகளைக் கூறி, மலிவான விளம்பரம் தேடுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலிலும், இதே வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்பட்டன. இதை கேஜரிவால் புரிந்துகொள்ள வேண்டும்.
  பிரதமர் நரேந்திர மோடி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், மக்களிடம் ஆதரவு குறைந்ததற்கான காரணங்களை எதிர்க்கட்சிகள் சுயபரிசோதனை செய்து அறிய வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai