சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வங்கிக் கொள்ளை முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர்.
  ஸ்ரீநகரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் வெள்ளிக்கிழமை காலை இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் அங்குள்ளவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனர்.
  இதுகுறித்து தகவலறிந்த ராணுவத்தினர், அந்தப் பகுதிக்கு விரைந்து வந்து வங்கியை சுற்றி வளைத்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதில் ஒரு பயங்கரவாதி மட்டும் ராணுவ வீரர்களிடம் பிடிபட்டார். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். ராணுவத்தினர் நடத்திய விசாரணையில், பிடிபட்ட பயங்கரவாதியின் பெயர் முனீஃப் அகமது மல்லா என்பது தெரியவந்தது. எனினும், அவர் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai