சுடச்சுட

  
  devendrafadanvis

  பயிர் உற்பத்தியை அதிகரிக்க குழு விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வலியுறுத்தினார்.
  காரீஃப் பருவ பயிர் உற்பத்தி தொடர்பாக மும்பையில் முதல்வர் ஃபட்னவீஸ் தலைமையில், வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஃபட்னவீஸ் பேசியதாவது:
  பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டின் முக்கியக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை செயல்படுத்த வேண்டும். குழு விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், அடுத்த 2 மாதங்களுக்குள் பல்வேறு நீர்நிலைகளையும் உருவாக்க வேண்டும்.
  வேளாண் துறை, சந்தைப்படுத்ததுல் துறை, கூட்டுறவுத் துறை ஆகியவற்றைப் பாராட்டுகிறேன். இந்த மூன்று துறைகளும் வேளாண் உற்பத்தியை கடந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரிக்க பாடுபட்டிருக்கின்றன.
  விவசாயம் சார்ந்த பல்வேறு முறைகள் குறித்து வேளாண் பல்கலைக்கழகங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
  அனைத்து விவசாயிகளும் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். நல்ல பருவமழை வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
  ஒருவேளை, பருவமழை பொய்த்துவிட்டால் அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டிருக்க வேண்டும் என்றார் ஃபட்னவீஸ்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai