சுடச்சுட

  

  மத்தியப் பிரதேசத்தில் சம்பல் அதிவிரைவு சாலை: சிவ்ராஜ் சிங் சௌஹான், கட்கரி சந்திப்பில் முடிவு

  By DIN  |   Published on : 29th April 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்தியப் பிரதேசத்தை, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களோடு இணைக்கும் வகையில், சம்பல் பிராந்தியத்தில் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிவிரைவு சாலை அமைக்கப்படவுள்ளது.
  தில்லியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், மத்திய சாலை போக்குவரத்து-நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இடையேயான சந்திப்பில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 2,500 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதில் 50 சதவீத நிலம், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு சொந்தமானது. இந்த திட்டத்துக்கான செலவு மதிப்பீடு குறித்தும், பிற அம்சங்கள் குறித்தும் தகவல் இல்லை.
  இதனிடையே, நிதின் கட்கரியுடனான சந்திப்பின்போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான அமர்கந்தக், அலிராஜ்பூர் ஆகியவற்றை இணைக்கும் நர்மதை அதிவிரைவு சாலை குறித்து சிவராஜ் சிங் சௌஹான் ஆலோசனை நடத்தியுள்ளார்.
  மத்தியப் பிரதேசத்தில் பாதியில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நெடுஞ்சாலைகள் குறித்தும் சிவராஜ் சிங் எடுத்துரைத்தார். இதைக்கேட்ட நிதின் கட்கரி, இந்தப் பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai