சுடச்சுட

  

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான விவாதத்துக்கு ஜேட்லி கண்டனம்

  By DIN  |   Published on : 29th April 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arun

  தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிஐஐ அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேசும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், டிஜிட்டல் பரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக நடத்தப்படும் விவாதங்களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.
  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அத்துடன் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக, இனிமேல் வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
  இந்நிலையில், தில்லியில் சிஐஐ அமைப்பின் வருடாந்திரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அருண் ஜேட்லி பேசியதாவது:
  விவாத முறையில் அதிக சப்தத்துடன் பேசுவது மற்றும் திசை திருப்புதல் நடவடிக்கை குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நான் தாக்கல் செய்கையில், மகாத்மா காந்தியின் 'உண்மை எப்போதும் தோற்காது' என்ற பொன்மொழியை சுட்டிக்காட்டினேன்.
  இருப்பினும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விட, வாக்குச்சீட்டு முறை சிறப்பானது என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனையை விட ரொக்கப் பரிவர்த்தனை சிறப்பானது என்றும், ஆதாரை விட தனிநபரின் அடையாளத்தை தனித்தனியாக சேகரிப்பது சிறப்பானது என்றும் காலத்துக்கு ஒவ்வாத முறைகள் குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
  இந்த விவாதங்கள் அனைத்தும், பழைய காலத்துக்கு நம்மை திருப்பிக் கொண்டு போவதற்கான திசை திருப்பும் செயல்கள் ஆகும்.
  இந்த விவாதத்துக்கு பதிலடி கொடுப்பதற்கு நமக்கு நெஞ்சுரம் தேவைப்படுகிறது.
  அதேநேரத்தில், உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதையும், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகச்சிறந்த சீர்திருத்த நடவடிக்கைகளில் ஆதார் ஒன்று என்பûதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.


   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai