Enable Javscript for better performance
மேற்கு வங்கம்: படகுத் துறை விபத்தில் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    மேற்கு வங்கம்: படகுத் துறை விபத்தில் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு

    By DIN  |   Published on : 29th April 2017 12:53 AM  |   அ+அ அ-   |    |  

    மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் படகுத் துறையில் நிகழ்ந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.
    இதுதொடர்பாக, காவல் துறை கண்காணிப்பாளர் சுகேஷ் ஜெயின் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஹூக்ளி மாவட்டம், பத்ரேஷ்வர் பகுதியிலுள்ள படகுத் துறையில் சுமார் 20 பேர், படகுக்காக புதன்கிழமை காத்திருந்தனர். அவர்கள், படகு மூலம் ஹூக்ளி நதியைக் கடந்து ஷியாம் நகருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
    அப்போது, மூங்கில்களால் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் திடீரென சரிந்தன. இதில், அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர்.
    அவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். வியாழக்கிழமை வரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 5 பேரின் நிலை குறித்து சரியாகத் தெரியவில்லை. அவர்களைத் தேடி வருகிறோம்.
    இதனிடையே, படகுத் துறையை நடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் சுகேஷ் ஜெயின்.

     

    kattana sevai