சுடச்சுட

    

    பாஜகவில் இணைந்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: ராகுல் அதிர்ச்சி

    By DIN  |   Published on : 29th April 2017 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இம்பால்: மணிப்பூரில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேர், அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

    மணிப்பூரில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த என். பிரேன் சிங் பதவியேற்றுள்ளார்.

    இந்நிலையில், அந்த மாநிலத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களான நிகம்தங் ஹாகிப், ஒய். சுர்சந்திர சிங், எஸ். பீரா சிங், ஓ. லூகோய் சிங் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், அஸ்ஸாம் நிதியமைச்சர் ஹேமந்த விஸ்வகுமார், மணிப்பூர் பாஜக தலைவர் பாபானந்த சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்எல்ஏக்கள் கட்சி தாவல் ராகுலுக்கு கடும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai