சுடச்சுட

  
  shashi-tharoor

  புது தில்லி: "நாட்டில் தற்போது நிலவும் சூழலில், அதிபர் ஆட்சி முறையே தேவை' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறினார்.

  தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற அவர், இதுதொடர்பாக பேசியதாவது:

  நாடாளுமன்ற ஆட்சி முறை அடிப்படையிலான நமது நாட்டில், பிரதமர் நரேந்திர மோடிதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். அதிகாரிகளின் துணையுடன் அதிகார மையமாக அவர் செயல்படுகிறார். அவர் எடுக்கும் பல்வேறு முக்கிய முடிவுகள், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்குக் கூட தெரிவதில்லை.
  தனி நபர் அதிகாரமிக்க ஆட்சி முறையை நோக்கி, நமது நாடு சென்று கொண்டிருக்கிறது. இதை தடுக்க, அதிபர் ஆட்சி முறை வேண்டும்.

  அதிபர் ஆட்சி நடைமுறையில், நாட்டை யார் ஆள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ அந்த நபருக்கு வாக்களிப்பர். அதேவேளையில், அவர் சார்ந்த கட்சியினரைத்தான், தங்களது பிரதிநிதிகளாக (எம்.பி.க்கள்) தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தேவையில்லை.

  இதன்மூலம், பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் கட்சியைச் சேர்ந்தவர்தான் நாட்டை ஆளும் பொறுப்புக்கு வர முடியும் என்ற நிலை மாறும். பிற கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அதிக அளவில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

  அப்போது, சட்டங்கள் இயற்றுவதற்கு, அனைத்துக் கட்சியினருடைய ஆதரவும் அதிபருக்கு தேவைப்படும். இதன் மூலம் அதிகார குவிப்பு தடுக்கப்படும் என்றார் சசி தரூர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai