சுடச்சுட

  

  ஆமாம், நாங்கள் தவறு செய்து விட்டோம்: கடைசியாக ஒப்புக் கொண்டார் முதல்வர்

  By DIN  |   Published on : 29th April 2017 03:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  election


  புது தில்லி: தில்லி மாநகராட்சித் தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கடைசியாக, தாங்கள் தவறு செய்து விட்டோம் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

  தில்லி மாநகராட்சித் தேர்தல் தோல்விக்கு, வாக்கு இயந்திரங்கள்தான் காரணம் என்று இதுவரை குற்றம்சாட்டிவந்த அரவிந்த் கேஜ்ரிவால், இன்று ஒரு மிகப்பெரிய உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

  அதாவது, ' ஆம் ஆத்மி கட்சி தவறு செய்து விட்டது. எங்களை நாங்களே சுயபரிசோதனை செய்து கொண்டு, செயல்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

  சமூக ஆர்வலர்கள் மற்றும் சில வாக்காளர்களுடனான கலந்துரையாடலின் போது பேசிய கேஜ்ரிவால், 'தேவை நடவடிக்கையதானே தவிர, காரணங்கள் அல்ல'. கடந்த இரண்டு நாட்களாக பல தரப்பட்ட மக்களிடம் நான் பேசினேன். சில யதார்த்தங்கள் இருக்கின்றன. ஆமாம் நாங்கள் தவறு செய்துவிட்டோம். ஆனால் எங்களை நாங்கள் சுய பரிசோதனை செய்து, செயல் திறனை மாற்றியமைப்போம். மீண்டும் எங்கள் செயல்பாட்டு வரைபடத்துக்கே திரும்ப வேண்டும்' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai