சுடச்சுட

  

  அமெரிக்கா: திருட்டு வழக்கில் இந்தியருக்கு 20 மாதம் சிறை

  By DIN  |   Published on : 30th April 2017 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அமெரிக்காவில் வங்கியில் மோசடி செய்தது மற்றும் தாம் பணிபுரிந்த நிறுவனத்தில் திருடியது ஆகிய குற்றச்சாட்டின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில் இந்தியருக்கு 20 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  டெக்சாஸ் மாகாணம் கான்ரோவைச் சேர்ந்தவர் கிரண் அந்தாவரபு (45). அமெரிக்க வாழ் இந்தியரான அவர், அங்குள்ள வேதர்போர்டு நிறுவனத்தில் நிதி கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். அப்போது அவர், வேதர்போர்டு நிறுவனத்தின் கிளை நிறுவனமான 'இ-புரொடக்ஷன் சொலியூஷன்' நிறுவனத்தின் பெயரில் வங்கியில் சொந்தமாக கணக்குத் தொடங்கியுள்ளார். அதில் தன்னை உரிமையாளர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
  அதைத் தொடர்ந்து, தான் பணிபுரிந்த நிறுவனத்துக்கு வந்த ரீபண்ட் காசோலைகளை திருடி தாம் உருவாக்கிய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். இதுபோன்று சுமார் ரூ.3.11 கோடி அளவுக்கு அவர் பணத்தை திருடியுள்ளார்.
  இதுகுறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் அந்தாவரபு செய்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
  டெக்சாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அந்தாவரபும் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அந்தாவரபுக்கு கடந்த வியாழக்கிழமை தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்தது. அப்போது அந்தாவரபுக்கு 20 மாதம் சிறைத் தண்டனையும், 3 ஆண்டுகள் காவல் கண்காணிப்பு தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai