சுடச்சுட

  
  TAPIR-GAO

  அருணாசலப் பிரதேசத்துக்கு சீனா உரிமை கோருவது அடிப்படையற்றது என்று பாஜக தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாக அந்த மாநில பாஜக தலைவர் தாபிர் காவ், இடாநகரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  அருணாசலப் பிரதேசத்துக்கு சீனா உரிமை கோருவது அடிப்படையற்றது. சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லை இருந்ததில்லை. திபெத்துடன்தான் நமக்கு எல்லை இருதது. எனினும், திபெத்தை சீனா வலுக்கட்டாயமாக கடந்த 1959-இல் ஆக்கிரமித்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் (சீனா) தங்கள் எல்லையை அருணாசலப் பிரதேசம் வரை விஸ்தரிக்க விரும்பினர். அது இந்த மாநில மக்களுக்கு ஏற்புடையது அல்ல என்றார் அவர்.
  முன்னதாக, அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களை சீனா மாற்றிக் குறிப்பிட்டதைக் கண்டித்து பாஜக, இடாநகரில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இது தொடர்பாக அக்கட்சியினர் மாநில ஆளுநர் பி.பி.ஆச்சார்யாவிடம் மனு அளித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai