சுடச்சுட

  

  அஸ்ஸாம்: பாஜக பெண் எம்எல்ஏ குறித்து முகநூலில் அவதூறு: டிஎஸ்பி கைது

  By DIN  |   Published on : 30th April 2017 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக பெண் எம்எல்ஏ குறித்து முகநூலில் அவதூறாக கருத்துகள் பதிவிட்டதாக, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அந்தஸ்திலான அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டார்.
  அஸ்ஸாம் காவல்துறையின் 23-ஆவது படைப் பிரிவில் துணைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் பணியாற்றும் அஞ்சன் போரா என்ற அதிகாரி, மாநில பாஜக பெண் எம்எல்ஏ ஒருவர் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாகத் தெரிகிறது.
  அந்த பெண் எம்எல்ஏ, மாநில தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தனது அலுவலக அறையில், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக அஞ்சன் போரா பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  பெண் எம்எல்ஏவின் முழுப் பெயரைக் குறிப்பிடாமல், அவரது குடும்பப் பெயரை குறிப்பிட்டுவெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவு குறித்து காவல்துறையில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
  அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அஞ்சன் போராவை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
  அஞ்சன் போரா முகநூலில் ஏற்கெனவே சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு, பணியிடைநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.
  அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அக்கட்சிக்கு 2 பெண் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai