சுடச்சுட

  

  ஆட்சி அதிகாரத்துக்காக ஜனநாயக படுகொலைக்குக்கூட பாஜக தயங்காது: மாயாவதி தாக்கு

  By DIN  |   Published on : 30th April 2017 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  'ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு பாஜக தயாராக இருக்கிறது; ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய அக்கட்சி தயங்காது' என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.
  இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்றைய கால கட்டத்தில் பாஜக அதிகார போதைக்கு அடிமையாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு அக்கட்சி தயாராக இருக்கிறது. ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய அவர்கள் தயங்கமாட்டார்கள்.
  உத்தரப் பிரதேசம், உத்தரகண்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ததன் மூலமும், கோவா, மணிப்பூரில் பண பலத்தின் மூலமும் பாஜக ஆட்சியை பிடித்ததன் வாயிலாக அது நிரூபணமாகியுள்ளது.
  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், நாட்டில் தலித்துகள், பின்தங்கியோர், பழங்குடியினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மேற்கண்ட சமூகத்தினருக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இச்சமூகங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள், மோசமான நிலையில் வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மாயாவதி கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai