சுடச்சுட

  

  இந்தியாவின் எஸ்.பி.எஸ். வழிக்காட்டி செயலியை உருவாக்க நிறுவனங்களுக்கு இஸ்ரோ அழைப்பு

  By DIN  |   Published on : 30th April 2017 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sps

  இந்தியாவின் பிரத்யேக எஸ்.பி.எஸ்.(Standard Positioning System)   செயலியை உருவாக்குவதற்கு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
  ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 ஏ முதல் ஜி வரையிலான 7 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தொடர்ந்து விண்ணில் வெற்றிகரமாக அண்மையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள்களான இவற்றின் வாயிலாக அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்த தன்னிறைவை இந்தியா அடைந்துள்ளது.
  18 மணி நேரம் இயங்கும்: விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த 7 செயற்கைக்கோள்களும் தற்போது 24 மணி நேரமும் தகவல்களை தரத் தொடங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக இதற்கான செயலியை உருவாக்குவதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதில், முதல்கட்டமாக செல்லிடப்பேசிகளில் பயன்படுத்துவதற்கான செயலியை உருவாக்க வேண்டும். இதனை உருவாக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரலாம் என அறிவித்துள்ளது.
  மேற்குறிப்பிட்ட செயற்கைக்கோள்கள் 1,500 கி.மீ. சதுர பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணித்து தகவல்களை அனுப்பும். மேலும், தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் இவற்றின் மூலம் கண்காணிக்க முடியும்.
  இதுகுறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:
  ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். திட்டத்தின் 7 செயற்கைக்கோள்களும் முழுமையாகத் தகவல்களை வழங்கத் தொடங்கியுள்ளன. இவற்றின் மூலம் இந்தியா முழுவதும் மட்டுமல்லாது பாகிஸ்தான், இலங்கை நாடுகளின் கடல், நிலப் பரப்புகளையும் கண்காணிக்க முடியும்.
  இந்தச் சேவையை செல்லிடப்பேசியில் பயன்படுத்த மென்பொருளை உருவாக்க வேண்டும்.
  இதற்காக இந்தியா மற்றும் உலகளாவிய செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம்நாட்டின் வழிக்காட்டி நேவிக் (NavIC) உருவாக்கப்பட்டுவிட்டால், அமெரிக்காவின் ஜி.பி.எஸ். சேவை நமக்கு தேவைப்படாது.
  மேலும், எஸ்.பி.எஸ். வழிகாட்டியை இந்தியாவின் கூகுள் தேடுதளத்திலும் பயன்படுத்த அந்த நிறுவனத்தின் இந்தியத் தலைமையகத்திலும் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
  இதுவரை அனுப்பபட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்கள்!
  2013, ஜூலை 12 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ
  2014, ஏப்.4 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி
  2014, அக்.15 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி
  2015, மார்ச் 28 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி
  2016 ஜன.20 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1இ
  2016 மார்ச் 19 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.- 1எஃப்
  2016 ஏப்ரல் 28 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai