சுடச்சுட

  

  உத்தரப் பிரதேசத்தில் நீதிபதிகள் சுமார் 400 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சரிபாதி பேர், கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஆவர்.
  இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தினேஷ் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  கூடுதல் மாவட்ட நீதிபதிகள் 199 பேரும், விரைவு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதிகள் 8 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தத்தமது பொறுப்பை ஒப்படைக்க மே மாதம் 8-ஆம் தேதி தயாராக இருத்தல் வேண்டும்.
  தலைமை நீதித்துறை நடுவர் (சிஜேஎம்), தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் (சிஎம்எம்), கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் (ஏசிஜேஎம்), கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் (ரயில்வே), கூடுதல் தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் (சிஎம்எம்), சிவில் நீதிபதிகள், கூடுதல் சிவில் நீதிபதிகள் (மூதுநிலை பிரிவு), சிறிய பிரச்னை தொடர்பான நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் உள்ளிட்ட 118 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  இதுதவிர்த்து, சிவில் நீதிபதி, கூடுதல் சிவில் நீதிபதி (இளநிலை பிரிவு), நீதித்துறை நடுவர், பெருநகர நீதித்துறை நடுவர் ஆகிய பதவி வகிக்கும் 43 நீதிபதிகள் புதிய இடங்களில் பணிகளில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்று அந்த அறிவிக்கையில் பதிவாளர் ஜெனரல் தினேஷ் குமார் சிங் குறிப்பிட்டுள்ளார்.
  உத்தரப் பிரதேசத்தில் கீழமை நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பணியிட மாற்ற நடவடிக்கை இதுவாகும். இதில் அதிகபட்சமாக அலிகாரைச் சேர்ந்த நீதிபதிகள் 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கடுத்து, ஆக்ரா (5), கான்பூர் நகர், மீரட், ஷஹரான்பூர், சோன்பத்ரா, வாராணசி (தலா 4) ஆகிய இடங்களில் நீதிபதிகள் அதிக எண்ணிக்கையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai