சுடச்சுட

  

  உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்

  By DIN  |   Published on : 30th April 2017 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranap

  உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
  இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸுக்கு தில்லியில் சனிக்கிழமை விருந்து அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  சைப்ரஸும், இந்தியாவும் பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
  இந்த சூழலில் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். பயங்கரவாதத்தை தனியாக ஒரு நாடு மட்டும் எதிர்க்காமல், உலகளவில் ஒன்றிணைந்து எதிர்த்து போராட வேண்டும்.
  சைப்ரஸின் முந்தைய அதிபர்கள் அனைவரும் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அதன்படி, நீங்களும் இந்தியா வருகை புரிந்துள்ளது எங்கள் தேசத்துக்கே பெருமை.
  'இந்தியாவில் தயாரிப்போம்', 'திறன்மிகு இந்தியா' போன்ற திட்டங்களில் பங்கேற்று இந்தியாவின் வளர்ச்சியில் சைப்ரஸும் பங்கேற்க வேண்டும் என்றார் பிரணாப்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai