சுடச்சுட

    

    கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண்: மணீஷ் திவாரி யோசனை

    By DIN  |   Published on : 30th April 2017 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணீஷ் திவாரி யோசனை தெரிவித்தார்.
    இதுகுறித்து சண்டீகரில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: அரசியல் கட்சிகள் நிதி பெறுவது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டுமென்றால், கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் அனைத்தும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு ஒருவர் ரொக்கமாக ஒரு ரூபாய் நன்கொடை அளித்தாலும் சரி, ரூ.5 லட்சம் அளித்தாலும் சரி, அந்த நன்கொடை குறித்த விவரத்தில் அளித்தவரின் முகவரியுடன் ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும். எனவே, தேர்தல் செலவுகளுக்கு அரசே நிதியளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai