சுடச்சுட

  

  கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக டாக்டர் செல்லக்குமார் நியமனம்

  By DIN  |   Published on : 30th April 2017 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவா மாநில காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளராக டாக்டர் அ.செல்லக்குமார் (53) நியமிக்கப்பட்டுள்ளார்.
  கர்நாடக மாநிலத்துக்கு...: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகரைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், பி.சி.விஷ்ணுநாத், மது யாஷ்கி கௌட, டாக்டர் ஷேக் சைலஜாநாத் ஆகிய நான்கு பேர் வேணுகோபாலுக்கு கர்நாடக மாநில விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள உதவுவார்கள். இந்த நியமனங்கள் குறித்த அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்த்தன் துவிவேதி சனிக்கிழமை (ஏப்.29) வெளியிட்டார்.
  செல்லக்குமார்: அகில இந்திய காங்கிரஸின் செயலாளராக கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் செல்லக்குமார். 1991-இல் அண்ணா நகர், 1996-இல் தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக 1986-1994 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாணவர் அணித் தலைவராகவும், 1994-1996 வரை இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.
  திக்விஜய் சிங் நீக்கம்: கர்நாடக மற்றும் கோவா மாநில பொறுப்பாளராக பதவி வகித்த திக்விஜய் சிங் அப்பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai