சுடச்சுட

    

    சட்டவிரோதமாக மாத்திரைகள் இறக்குமதி: இந்திய அமெரிக்கருக்கு 5 ஆண்டுகள் சிறை

    By DIN  |   Published on : 30th April 2017 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீனாவிலிருந்து சட்டவிரோதமாக மாத்திரைகளை இறக்குமதி செய்து வினியோகித்ததாக இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அளித்ததுடன் அமெரிக்க குடியுரிமையையும் அந்நாட்டு நீதிமன்றம் திரும்பப் பெற்றுக் கொண்டது.
    இதனால், சிறை தண்டனை முடிவடைந்த பிறகு அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஜார்ஜியாவின் டெகாடுர் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் அலி கான் (29). இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இவர் சீனாவிலிருந்து சட்டவிரோதமாக மாத்திரைகளை இறக்குமதி செய்து வினியோகித்ததாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இவர் குற்றவாளி என கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், தண்டனை விவரங்கள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
    அவருக்கு 5 ஆண்டுகள் 7 மாதச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதுடன், அமெரிக்கவாழ் குடியுரிமையும் பறிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. இதனால், அவர் சிறை வாசத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai