சுடச்சுட

  

  தில்லி நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக் கைதி சுட்டுக் கொலை

  By DIN  |   Published on : 30th April 2017 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லி ரோஹிணியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட கைதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
  தில்லியில் கடந்த ஆண்டு நிகழ்ந்தகொலைச் சம்பவம் தொடர்பாக ஹரியாணா மாநிலம், ஜாஜர் மாவட்டத்தைச் சேர்ந்த மோஹித் என்பவரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே, ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கில் மோஹித்தை கைது செய்து அம்மாநில சிறையில் ஹரியாணா காவல் துறை அடைத்தது.
  இந்நிலையில், தில்லியில் உள்ள ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் மோஹித்தை ஆஜர்படுத்துவதற்காக ஹரியாணா காவல் துறையினர் சனிக்கிழமை அழைத்து வந்தனர்.
  நீதிமன்ற வளாக நுழைவுப் பகுதிக்கு மோஹித் கொண்டு வரப்பட்ட போது, அங்கு மோட்டார்சைக்களில் காத்திருந்த இருவரில் ஒருவர் திடீரென மோஹித்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே மோஹித் உயிரிழந்தார். இந்நிலையில், மோட்டார்சைக்கிளில் இருந்த இருவரும் தப்பிச் செல்ல முற்பட்டனர்.
  அப்போது, மோஹித்தின் காவலுக்காக வந்த ஹரியாணா காவல் துறையினர் இருவரையும் மடக்கிப் பிடிக்க முயன்றனர். இதில் துப்பாக்கியால் மோஹித்தை சுட்ட நபர் மட்டும் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி விட்டார். இதையடுத்து, பிடிபட்ட நபரின் பெயர் ராஜேஷ் என தெரிய வந்துள்ளது. மோட்டார் சைக்களில் தன்னுடன் வந்த சதீஷ் என்ற நபர் கூறியதன் பேரில் மோஹித்தை சுட்டுக் கொன்றதாக ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெறு வருகிறது என்று காவல் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai