சுடச்சுட

  

  நாட்டிலேயே டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதலாவது பஞ்சாயத்து வார்டு!

  By DIN  |   Published on : 30th April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tourist

  கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஐமனம் என்ற கிராமத்தில் உள்ள 15-ஆவது வார்டு நாட்டிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வார்டு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
  இந்த வார்டில் உள்ள சுமார் 423 குடும்பங்களின் தகவல்களும் www.digitalaymanam.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ரத்த தானம் செய்வோரின் செல்லிடப்பேசி எண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்தக் கிராமத்தில் உள்ள கோயில் ஒன்றின் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் பங்கேற்று, இந்த இணையதளத்தைப் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
  பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய 'டிஜிட்டல் இந்தியா'
  திட்டத்துக்கு கேரளத்தில் உள்ள ஒரு மிகச் சிறிய கிராமத்தில் செயல் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிரதமரின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. இதை வெற்றிகரமாக செய்துமுடித்த ஐமனம் கிராமத்தின் 15-ஆவது வார்டு உறுப்பினரும், ஆசிரியருமான தேவகியை பாராட்டுகிறேன் என்றார் கிருஷ்ணன் பால் குர்ஜர்.
  கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் தேவகி. இணையதள தொடக்க விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்துவிட்டது. அதற்கான காரணத்தை அக்கட்சி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai