சுடச்சுட

  

  'பதிவு பெற்றும் கணக்கு தாக்கல் செய்யாத 9 லட்சம் நிறுவனங்கள்'

  By DIN  |   Published on : 30th April 2017 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  HASMUKH-ADIYA

  மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்தில் பதிவு பெற்றுள்ள 9 லட்ச நிறுவனங்கள், தங்களது வருடாந்திர வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாமல் உள்ளதாக வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.
  தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது: நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்தில் 15 லட்சம் நிறுவனங்கள் பதிவு பெற்றுள்ளன.
  இவற்றில், 6 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளன.
  எஞ்சிய 9 லட்சம் நிறுவனங்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமலிருப்பதால், பண மோசடி நடைபெறுவதற்கான அபாயம் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி வருகின்றனர்.
  வருமான வரி கணக்கு செலுத்தாத அனைத்து நிறுவனங்களுமே மோசடி நிறுவனங்கள் என்று அர்த்தமில்லை. அவற்றில் செயல்படாத நிறுவனங்களும் இருக்கலாம்.
  பண மோசடிக்கு எதிரான நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், அமலாக்கத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
  மனிதர்களுக்குப் பதிலாக, ஊழல் செய்ய முடியாத தொழில்நுட்பச் சாதனஙகளின் பயன்பாட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதன் மூலம், பணத்தை எந்த வழியிலெல்லாம் பதுக்கி வைக்கிறார்கள் என்பதை அமலாக்கத் துறை கற்றுக்கொண்டது என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai