சுடச்சுட

  

  பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவும் நோய்: ஹமீது அன்சாரி

  By DIN  |   Published on : 30th April 2017 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hameedansari

  அரசு முறை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் சனிக்கிழமை நாடு திரும்பியபோது செய்தியாளர்களுக்கு அந்த விமானத்திலேயே பேட்டியளித்த குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி.

  பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவக் கூடிய தொற்றுநோய் போன்றது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.
  ஆர்மீனியா மற்றும் போலந்து நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவிட்டு, சனிக்கிழமை அவர் தாயகம் திரும்புகையில், விமானத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
  பயங்கரவாதம் என்பது உலகம் முழுவதும் பரவக்கூடிய தொற்றுநோயைப் போன்றது.
  உலகின் அனைத்து நாடுகளும் சிறிய அளவிலோ, மிகப் பெரிய அளவிலோ பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
  எனினும், பயங்கரவாதம் என்பதற்கான வரையறையில் சில நாடுகள் குறைகளைக் காண்பதன் மூலம், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்கின்றன.
  நான் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதராக இருந்தபோதுதான், சர்வதேச பயங்கரவாதத் தடுப்பு ஒப்பந்தம் ஐ.நா.வின் முன்வைக்கப்பட்டது. இந்தியா தலைமையில் முன்வைக்கப்பட்ட அந்தத் தீர்மானம், பயங்கரவாதம் என்பதற்கான வரையறையில் உலக நாடுகளிடையே காணப்படும் முரண்பாடு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
  பயங்கரவாதத்துக்கு எதிராக திறனுடன் செயல்பட விரும்பாதவர்கள், பயங்கரவாதத்தை வரையறுப்பதில் சட்ட சிக்கல்களைக் காண்கின்றனர்.
  ஆர்மீனியாவுக்கும், போலந்து நாட்டுக்கும் நான் மேற்கொண்ட பயணம் மிகவும் பயனுடையதாக இருந்தது. இந்தியாவின் நட்பு நாடுகளான இரண்டும், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டின என்றார் அவர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai