சுடச்சுட

  

  பிரிவினைவாதிகளுடன் பேச்சு இல்லை: மத்திய அரசின் முடிவுக்கு ஃபரூக் அப்துல்லா எதிர்ப்பு

  By DIN  |   Published on : 30th April 2017 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  farook

  ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது மாநிலத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
  இந்த விவகாரத்தில் துப்பாக்கிகளும், குண்டுகளும் பலனளிக்காது என்றும் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அண்மையில் விசாரணையில் நடைபெற்றது. அப்போது பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
  இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் ஸ்ரீநகரில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதுதொடர்பாக கூட்டத்தில் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:
  ஜம்மு - காஷ்மீரைப் பொருத்தவரை தற்போது மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல், சாலைகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் இணையதளச் சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
  இத்தகைய நிலையில் பிரிவினைவாதிகளுடன் பேச மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்திருப்பது மாநிலத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும். அரசின் இந்த முடிவு வருத்தத்தை அளிக்கிறது.
  நியாயப்படி மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், அவரோ மெளனம் சாதித்து வருகிறார்.
  துப்பாக்கிகளும், ஆயுதங்களும் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வாகாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுடன் விரைவில் இந்தியா பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். அதுவே இதற்கு ஒரே தீர்வாக அமையும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai