சுடச்சுட

  

  மனித உரிமை ஆர்வலர்கள் என்ற போர்வையில் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட வேண்டும் என்று பாஜக பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வர்கீயா வலியுறுத்தினார்.
  இதுகுறித்து அவர் மத்தியப் பிரதேச மாநலம், இந்தூரில் சனிக்கிழமை கூறியதாவது:
  மத்திய அரசு மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டி, தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு விருதுகளை கடந்த 2015-ஆம் ஆண்டில் சிலர் திருப்பியளித்தனர்.
  ஆனால், நக்ஸல் தீவிரவாதிகள் சுக்மா மாவட்டத்தில் தாக்குதல் நிகழ்த்தி 25 சிஆர்பிஎஃப் வீரர்களைக் கொன்றபோது அவர்கள் எங்கே போனார்கள்? அதுகுறித்து அவர்கள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
  மனித உரிமை என்ற போர்வையில் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்போரின் முகத்திரைகள் கிழிக்கப்பட வேண்டும். சத்தீஸ்கரிலும், ஜம்மு-காஷ்மீரிலும் தவறாக வழிகாட்டப்படும் சிலர் வன்முறைப் பாதைக்குச் செல்வது கவலையளிக்கிறது.
  சமூக சேவகர்கள் பயங்கரவாதத்தின் கொடூரத்தன்மை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதுதான் பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதம் ஆகியவற்றை ஒடுக்க அரசுக்கு செய்யும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai