சுடச்சுட

  

  முத்தலாக்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக இருக்கும்

  By DIN  |   Published on : 30th April 2017 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AKGANGULY

  முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக இருக்கும் என்று கருதுவதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி தெரிவித்தார்.
  மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் முத்தலாக் தொடர்பாக கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏ.கே. கங்குலி செய்தியாளர்களிடம் பேசினார்.
  அப்போது அவர் கூறுகையில், 'உச்ச நீதிமன்றத்தைக் காட்டிலும் யாரும் உயர்ந்தவர் கிடையாது. முத்தலாக் தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்ததும் தீர்ப்பு வெளியிடப்படும். அந்த தீர்ப்பு சாதகமான தீர்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்' என்றார்.
  முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படும் முத்தலாக், பலதாரமணம், நிக்கா ஹலாலா ஆகிய நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai