சுடச்சுட

  

  ராஜீவ் ஆட்சிக் காலம் போல தற்போது இல்லை: மானியம் குறித்து மத்திய அமைச்சர் கருத்து

  By DIN  |   Published on : 30th April 2017 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ravi-shankar-prasad

  மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலம் போல அல்லாமல் தற்போது மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி அனைத்தும் பயனாளிகளுக்கு முழுமையாகச் சென்றடைகிறது என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
  நவீன தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்துவதே அதற்குக் காரணம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:
  இன்றைய நவநாகரீக உலகில் நவீன தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளில் அதிமுக்கியப் பங்காற்றி வருகின்றன. இத்தகைய துரிதமான வளர்ச்சியை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் சூழலில், தொழில்நுட்பப் பயன்பாட்டின் காரணமாக ஏழைகளுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
  ஏழைகளுக்கு எதிரான குற்றங்களை இனி மூடி மறைக்க இயலாது. தொழில்நுட்பத்தின் (சமூக வலைதளங்கள், செல்லிடப்பேசிகள், கண்காணிப்பு கேமராக்கள்) உதவியுடன் சாமானிய மக்களின் நீதி நிலைநாட்டப்படுகிறது.
  இதைத்தவிர, மத்திய அரசு முன்னெடுத்து வரும் பல்வேறு திட்டங்களும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையிலேயே உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் 28 கோடி ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. நேரடி மானியத் திட்டத்தின் கீழ் ரூ.50,000 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
  மக்கள் நலனுக்காக ரூ.1 ஒதுக்கினால் வெறும் 15 பைசா மட்டுமே பயனாளிகளுக்குச் சென்றடைகிறது என்று ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தெரிவித்தார். ஆனால், தற்போது அத்தகைய நிலை இல்லை. மத்திய அரசு ஒதுக்கும் நிதி முழுவதும் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைகிறது என்றார் அவர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai