சுடச்சுட

  

  விதிமுறைகள் மீறப்படும்போது அதிகாரத்தை பயன்படுத்துங்கள்: அமலாக்கத் துறையிடம் ஜேட்லி வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 30th April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arunjetly

  அந்நியச் செலாவணி வர்த்தகம் மேற்கொள்ளப்படும்போது விதிமுறைகள் மீறப்பட்டு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றால் அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று அமலாக்கத் துறையிடம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார். அமலாக்கத் துறை தினம் தில்லியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  அதில் பங்கேற்று ஜேட்லி கூறியதாவது:
  அன்னியச் செலாவணி வர்த்தகம் மேற்கொள்ளுபவர்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அதேநேரம், விதிமுறைகள் மீறப்பட்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதை கண்டறிந்தால் அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கையை குற்றவாளிகளுக்கு எதிராக நீங்கள் (அமலாக்கத் துறை அதிகாரிகள்) மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசு கருவூலத்தின் மதிப்பு அதிகரிக்கும் என்றார் ஜேட்லி.
  முன்னதாக, இதே நிகழ்ச்சியில் பேசிய வருவாய்த் துறைச் செயலர் ஹஷ்முக் அதியா, 'பதிவு செய்யப்பட்ட சுமார் 9 லட்சம் நிறுவனங்கள் கார்ப்பரேட் அமைச்சகத்திடம் வருமான வரித் தாக்கல் செய்யவில்லை.
  சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடப்பது போன்று தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடியால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு இந்த நிறுவனங்களை 15 தினங்களுக்கு ஒரு முறை கண்காணித்து வருகிறது' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai