சுடச்சுட

  

  விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: ஆட்சியர்களுக்கு நவீன் பட்நாயக் அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 30th April 2017 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  naveenpat

  விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களை ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டார்.
  அட்சய திருதியை நாளையொட்டி புவனேசுவரத்தில் முதல்வர் தலைமையில் விவசாயிகள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அவர் பேசியது:
  விவசாயிகளின் நலனும், அவர்களுக்கு அதிகாரமளித்தலும் பிஜு ஜனதாதள அரசின் முக்கிய நோக்கமாகும். எனவே விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஆட்சியர்கள் முக்கியத்துவம் தரவேண்டும்.
  வேளாண் உற்பத்தி, உற்பத்தித் திறன், விவசாயிகளின் வருவாய்ப் பெருக்கம் உள்ளிட்ட அம்சங்களில் ஒடிஸா மாநிலம் சாதித்துக் காட்டியுள்ளது. வருங்காலத்திலும் வேளாண்மை துறையில் பல சாதனைகளைச் செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது.
  மத்திய அரசின் அறிக்கைப்படி கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. மாநிலத்தில் வேளாண் வளர்ச்சிக்கென இரு தொகுப்பு நிதிகள் தலா ரூ.100 கோடி வீதம் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்று விதைகளுக்காகவும் மற்றொன்று உரங்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகளுக்கு 1 சதவீத வட்டி விகிதத்தில் வேளாண் கடன் அளிக்கப்படுகிறது என்றார் நவீன் பட்நாயக்.
  தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய வேளாண் அமைச்சர் பிரதீப் மகாரதி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்தும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு அளிப்பது தொடர்பாகவும் அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
  இதற்கிடையில் குர்தா மாவட்டம் பனியோரா நகரில் நடைபெற்ற விதை விதைப்பு நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் பிரசாத் ஹரிசந்தன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், 'வேளாண் சமூகத்தினரின் குறைகளை தீர்க்க விவசாயிகள் ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்' என்றார்.
  நுவாபாடா மாவட்டத்தில் அட்சய திருதியை கொண்டாட்டம் பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் வசந்த பாண்டா பங்கேற்றார். புரியில் அட்சய திருதியை நாளையொட்டி ஜெகந்நாதரின் தேர் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது.
  இன்ஸ்டாகிராமில் பட்நாயக்: குடிமக்களுடன் குறிப்பாக இளைய சமுதாயத்தினருடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் முதல்வர் நவீன் பட்நாயக் சனிக்கிழமை இணைந்தார். 000சஹஸ்ங்ங்ய்ஞக்ண்ள்ட்ஹ என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் முதல்வரை தொடர்பு கொள்ளலாம் என முதல்வரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai