சுடச்சுட

  

  வெளிநாட்டு பணி வாய்ப்பு: விசா கட்டுப்பாடுகளால் கவலைப்பட வேண்டியதில்லை

  By DIN  |   Published on : 30th April 2017 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  PKSinha

  விசா நடைமுறையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது குறித்து இந்தியர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்று மத்திய அமைச்சகச் செயலர் பி.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.
  உள்நாட்டிலேயே போதிய அளவு தொழில் மற்றும் பணி வாய்ப்புகள் விரைவில் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  ஹெச்1பி விசா நடைமுறையில் அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் மூலம் அங்கு பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பணி வாய்ப்புகள் கேள்விக்குறியாகின. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா நடைமுறை விதிகளை கடுமையாக்கியது.
  இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் சபைகளின் கூட்டமைப்பு (சிஐஐ) கூட்டத்தில் பி.கே.சின்ஹா இதுகுறித்து பேசியதாவது:
  வளர்ந்த நாடுகள், தங்களது மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று வேலைவாய்ப்புகளிலும் அந்நாட்டு மக்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் சட்டவிதிகள் திருத்தப்பட்டு வருகின்றன.
  உலகமயமாக்கல் கொள்கைக்குப் புறம்பான வகையில் இந்த நடவடிக்கைகள் இருப்பதை உணர முடிகிறது. அதேவேளையில், இத்தகைய செயல்பாடுகள் எதிர்காலத்தில் உலகமயமாக்கல் கொள்ûயை முற்றிலும் பாதிக்கும் எனக் கூற முடியாது.
  வெளிநாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்தாலும், சரக்கு - சேவை துறைகளில் பரஸ்பரம் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டே ஆக வேண்டும். ஏனெனில் ஒரு நாட்டில் அனைத்து பொருள்களையும் உற்பத்தி செய்ய முடியாது. எனவே, உலகமயமாக்கல் கொள்கைகள் தொடரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
  அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் விசா நடைமுறையில் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எண்ணி இந்தியர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. உள்நாட்டிலேயே போதிய வாய்ப்புகள் விரைவில் உருவாகும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai