Enable Javscript for better performance
வேளாண் துறை வருவாய்க்கு வரி விதிக்கலாமா? அரவிந்த் பனகாரியா விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் துறை வருவாய்க்கு வரி விதிக்கலாமா? அரவிந்த் பனகாரியா விளக்கம்

    By DIN  |   Published on : 30th April 2017 12:37 AM  |   அ+அ அ-   |    |  

    PANAGARIYA

    வேளாண் துறை வருவாய்க்கு வரி விதிக்கலாமா என்ற கேள்வியே எழக் கூடாது என்று மத்திய கொள்கைக் குழு எனப்படும் நீதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா விளக்கம் அளித்தார்.
    தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் அவர் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பங்கேற்றார்.
    அப்போது, வேளாண் துறை வருமானத்துக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று நீதி ஆயோக் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'கிராமப்புறங்களில் ஆதாரமாக விளங்கும் வேளாண் துறை வருவாய்க்கு வரி விதிக்கலாமா? என்ற கேள்வியே எழக் கூடாது' என்று பனகாரியா பதிலளித்தார்.
    முன்னதாக, அந்த நிகழ்ச்சியில அவர் பேசியதாவது:
    தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலையை விவசாயிகள் பெறுவதற்கு நடைமுறையில் உள்ள கொள்கைகள் முறைப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய கொள்கைகளை வகுப்பதற்காகவே மத்திய அரசின் சார்பில் மாநில அரசுகளுடன் நீதி ஆயோக் இணைந்து செயல்பட்டு வருகிறது.
    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருளுக்கு உரிய மதிப்பை கட்டாயம் பெற வேண்டும். அதற்கு சில கொள்கைகளை முறைப்படுத்தி மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.
    வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் வேளாண் துறை வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி எடுத்துள்ளார். அதற்குத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் பனகாரியா.

     

    kattana sevai