சுடச்சுட

  

  12-ஆம் நூற்றாண்டிலேயே ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஒலித்தவர் பசவண்ணர்: கர்நாடக அமைச்சர்

  By DIN  |   Published on : 30th April 2017 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  12-ஆம் நூற்றாண்டிலேயே ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஒலித்தவர் பசவண்ணர் என கர்நாடக அமைச்சர் உமாஸ்ரீ தெரிவித்தார்.
  கன்னடம் மற்றும் கலாசாரத் துறை சார்பில் பெங்களூரு, ரவீந்திர கலாúக்ஷத்ராவில் சனிக்கிழமை நடைபெற்ற பசவண்ணர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:
  கன்னட மக்களால் போற்றிப் புகழப்படும் பசவண்ணர், கர்நாடகத்துக்கு கிடைத்த அறிவுமுத்தாகும்.
  800 ஆண்டுகளுக்கு முன்பே முற்போக்காக சிந்தித்து செயலாற்றியவர். உயர்ந்த ஜாதியில் பிறந்திருந்தபோதும் 12-ஆம் நூற்றாண்டிலேயே ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஒலித்தவர்.
  மனித குலத்தின் மாண்பை போற்றும் தத்துவங்களை தனது வசனங்கள் என்ற கவிதைகளின் மூலம் எடுத்துரைத்த தலைசிறந்த மனிதநேயவாதி.
  அனைத்து சமுதாயத்தினரும் சமத்துவ மாண்புடன் வாழ வேண்டும் என்று விரும்பி, அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டவர்.
  அந்தக் காலத்திலேயே ஏழை எளிய மக்களுக்கு தானமாக எதையும் வழங்க வேண்டும் என்று கூறி நடைமுறைபடுத்தியவர். அவரின் வழியொற்றி தற்போது அன்னதானம், கல்வி தானம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
  பசவண்ணர் எழுதிய வசன இலக்கியங்களில் சமூக நீதி, அரசியல் நேர்மை, ஆன்மீக உணர்வு, மன நலம், மொழியறிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உயர்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.
  பசவண்ணரைப் போலவே கர்நாடகத்தில் சமூக சீர்திருத்தத்துக்கு வித்திட்ட அக்கமகாதேவி, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட கித்தூர் ராணி சென்னம்மா ஆகியோரின் பிறந்த தினங்களை அர்சு சார்பில் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai