சுடச்சுட

    

    அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட பொறியாளர் உடல் ஹைதராபாதில் தகனம்

    By DIN  |   Published on : 01st March 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SrinivasKuchibhotla

    அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவின்  உடல் அவரது சொந்த ஊரான ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
    ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்குக்குப் பிறகு, சிதைக்கு ஸ்ரீநிவாஸின் தந்தை மதுசூதன ராவ் தீ மூட்டினார்.
    மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்ட தலைவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். அப்போது சிலர், அமெரிக்க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
    முன்னதாக, ஸ்ரீநிவாஸின் உடல் அமெரிக்காவில் இருந்து ஹைதராபாதுக்கு விமானம் மூலம் திங்கள்கிழமை நள்ளிரவு கொண்டு வரப்பட்டது. ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவரது வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். முன்னதாக, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும், ஸ்ரீநிவாஸின் வீட்டுக்குசென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
    அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜிபிஎஸ் கருவி தயாரிக்கும் நிறுவனத்தில் ஸ்ரீநிவாஸ் பணியாற்றி வந்தார். தன்னுடன் பணியாற்றி வந்த வாரங்கலைச் சேர்ந்த அலோக் மதசானியுடன் மதுபான விடுதிக்கு ஸ்ரீநிவாஸ் கடந்த புதன்கிழமை இரவு சென்றனர். அங்கு, அமெரிக்க கடற்படை முன்னாள் வீரரான ஆடம் புரின்டன், இந்த இருவரையும் இனவெறியுடன் திட்டியதுடன், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஸ்ரீநிவாஸ் உயிரிழந்தார். அலோக் சிகிச்சை பெற்று வருகிறார்.
    தெலுங்கில் பேச வேண்டாம் என்று கோரிக்கை: இதனிடையே, அமெரிக்காவில் வாழும் தெலுங்கு மக்கள் பொது இடங்களில் தெலுங்கில் பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென்று தெலங்கானா அமெரிக்கர்கள் தெலுங்கு சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
    இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
    நமது தாய் மொழியைப் பேசுவதை நாம் எப்போதும் விரும்பக் கூடியவர்கள் என்றாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவில் பொது இடங்களில் தெலுங்கில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai