Enable Javscript for better performance
அமெரிக்காவில் இந்திய மென் பொறியாளர் ஸ்ரீநிவாஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை: அதிபர் டிரம்ப் கண்டனம்- Dinamani

சுடச்சுட

  

  அமெரிக்காவில் இந்திய மென் பொறியாளர் ஸ்ரீநிவாஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை: அதிபர் டிரம்ப் கண்டனம்

  By DIN  |   Published on : 01st March 2017 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாஷிங்டன்: அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட  சம்பவம் வேதனை அளிப்பதாக அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றும் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா(32) கடந்த 23-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சால் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப்பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தனர்.

  மும்முரமான ஆட்டத்தின் போது அங்கே இருந்த ஒருவன், திடீரென தனது கைத்துப்பாக்கியை உருவி அருகில் இருந்த இந்தியர்களை நோக்கி சரமாரியாக கைதுப்பாக்கியால் சுட்டான்.

  என நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூவியபடி அவன் நடத்திய வெறித்தமான தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஸ்ரீநிவாஸ். காப்பாற்ற முயன்ற சகப் பணியாளரான இயன்கிரில்லாட்(24) எனபவர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  தப்பிச்சென்ற கொலையாளி சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் மிசோரியில் உள்ள மதுபான விடுதியில் குடித்துவிட்டு, துப்பாக்கிச் சூட்டில் இருவரை கொன்றுவிட்டதாக உளறினான். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த போலீஸார் அவனை கைது செய்தனர்.

  இச்சம்பவத்தால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

  இதையடுத்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் நடவடிக்கையை அடுத்து ஸ்ரீநிவாஸ் உடல் நேற்று அவரது சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

  இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது,  
  கான்சஸ் பகுதியில் துப்பாக்கி சூடு வேதனை அளிப்பதாக உள்ளது.

  அமெரிக்ககாவில் பிளவு ஏற்படுத்த நினைக்கும் சக்திகளுக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல  யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வன்முறையில் இருந்து மக்களைப் பாதுகாக்க, தனிக்குழு ஒன்றை அமைக்க நீதித்துறைக்கு பரிந்துரைத்துள்ளேன்.

  பயங்கரவாதத்திடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக, மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்புவது உறுதி.

  உலகிலேயே சிறந்த நாடாக அமெரிக்காவை மீண்டும் கொண்டு வர வேண்டும். வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். அமெரிக்காவின் வருங்காலத்தைப் பாதிக்கும் எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டேன். குடியுரிமைக் கொள்கைகளில் மாற்றம் செய்த பிறகு, அமெரிக்கர்களின் ஊதியம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai