சுடச்சுட

    

    ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த வழக்கு: ரூ.79 கோடி சொத்துகள் முடக்கம்

    By DIN  |   Published on : 01st March 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்த முறைகேடு வழக்கில், தேவாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.79.76 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
    இதுகுறித்து அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, தேவாஸ் நிறுவனத்தின் ரூ.79.76 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்படுகின்றன.
    அந்த சொத்துகள், அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பத்துடன் தேவாஸ் நிறுவனம் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புக்கு (இஸ்ரோ) அளித்த முன்பணம், பரஸ்பர நிதி வைப்புகள், வங்கி வைப்புகள் ஆகிய வடிவில் உள்ளன.
    இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் துணை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்பக் காப்புரிமைகள் தங்களிடம் இருப்பதாக கடந்த 2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் தேதி தேவாஸ் நிறுவனம் பொய்யான தகவலை அளித்துள்ளது.
    இந்தப் பொய்த் தகவல்கள் மூலம் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன் தேவாஸ் ஒப்பந்தம் மேற்கொண்டதற்கு இஸ்ரோ மற்றும் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சிலரே உடந்தையாக இருந்துள்ளனர் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) துணை நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ், பெங்களூரில் இருந்து செயல்படும் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியாவுக்கு விதிகளை மீறி குறைந்த விலையில் எஸ்-பாண்ட் அலைவரிசைகளை கடந்த 2005-ஆம் ஆண்டு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    இதுதொடர்பான ஒப்பந்தத்தில், அன்னியச் செலாவணி முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2012-ஆம் ஆண்டு அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழும், கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் இடையிலான ஒப்பந்தம் மத்திய அரசால் ரத்து செய்யப்
    பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai