சுடச்சுட

    

    இணையவழி அச்சுறுத்தல்கள்: ஆய்வுக்காக குழு அமைக்கிறது ஆர்பிஐ

    By DIN  |   Published on : 01st March 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடைமுறையில் உள்ள மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இணையவழி அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பல துறைகளுக்கு இடையேயான நிலைக் குழுவை அமைக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது.
    மும்பையில் உள்ள ஆர்பிஐ தலைமையகத்தில் இருந்து இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    இணையப் பாதுகாப்பு குறித்து 11 பேர் கொண்ட நிலைக் குழு ஆய்வு மேற்கொள்ளும்.
    இணையவழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், இணையப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தக் குழு ஆலோசனைகளை வழங்கும்.
    இந்தக் குழு, ஆர்பிஐ நிர்வாக இயக்குநர் மீனா ஹேமசந்திரா தலைமையில் செயல்படும்.
    மேலும் பல்வேறு நிபுணர்களும் குழுவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
    இணையப் பாதுகாப்புக்காக வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்ற போதிலும், இந்த ஆய்வு அவசியமாகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    முன்னதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அளித்த பரிந்துரைகளின் பேரில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ சுற்றறிக்கை அனுப்பியது.
    அதில், இணையவழி அச்சுறுத்தல்களை சமாளிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai