சுடச்சுட

  
  ponradhakrishnan

  கன்னியாகுமரி மாவட்டத்தின் ’இனயம்' வர்த்தக துறைமுகம் அமைப்பதற்கான ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மத்திய சாலை, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
  இது தொடர்பாக தில்லியில் அத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்கும் திட்டப் பணிகள் குறித்து அவருடன் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசினார். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  பதினோரு கடல் மைல் தூரத்துக்குள் மீன் பிடிக்கக் கூடிய வகையிலும், பிடித்த மீன்களை பதப்படுத்தி வைக்க வகை செய்யும் துறைமுகமாக இனயம் விளங்கும். இனயம் துறைமுகத்தில் இருந்து பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான முழு வசதிகளைத் செய்து தர மத்திய அரசு தயாராக உள்ளது என்று தமிழக முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் தொடக்கமாக, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai